கொழும்பில் இருந்து சென்ற பேருந்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து உடனடி சோதனையொன்று நடத்தப்பட்டுள்ளது.
அதன்போது, பயணத்தில் இருந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததாகவும், சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கல்கிசை தலைமையகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிச் செல்லும் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக 119 அவசர தொலைபேசி எண்ணின் மூலம் இன்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
முழுமையான ஆய்வு
அதனைதொடர்ந்து, உடனடியாக பதிலளித்த கல்கிசை பிரிவு போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, கடுபெத்த வீதித் தடைக்கு அருகில் பேருந்தை நிறுத்தி முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், இது மிரட்டல் நடவடிக்கையா அல்லது குற்றம் செய்வதற்கான திட்டமா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபரைக் கைது செய்யவும் காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |