இரண்டாவது நாளாகவும் குறைவடைந்த கொவிட் உயிரிழப்புகள்
covid
srilanka
death
By Sumithiran
நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாவது நாளாகவும் 100 இற்கு குறைவாக பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி நேற்றைய தினம் 66 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 ஆண்களும் 36 பெண்களும் அடங்குகின்றனர். இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,284ஆக அதிகரித்துள்ளது.