இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மற்றுமொரு உதவி
Sri Lanka
India
Milinda Moragoda
Dollars
By Sumithiran
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கடன் தொகையை இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிலிந்த மொறகொடவின் தீவிர முயற்சி
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட இந்திய அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பலனாக இந்த கடனுதவியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்