கொழும்பில் முறியடிக்கப்பட்ட மற்றுமொரு தாக்குதல் திட்டம்?
Shavendra Silva
Colombo
SriLanka
Bullets
Guns
By Chanakyan
கொழும்பில் அமைந்துள்ள பிரபல்யமான விகாரை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றுமொரு இடத்திலிருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு கட்டிடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கியின் 205 தோட்டாக்கள் நேற்று சிறிலங்கா காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு - புறகோட்டை, பிரிஸ்டல் வீதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டடம் ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
உயர்மட்ட பொருளாதார மையங்கள் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற தோட்டாக்கள் கண்டுபிடிப்பது பாதுகாப்பு பிரச்சினை என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்தி,