நாங்கள் சொல்வதை நிறைவேற்றாத அரசாங்கம் - கவலையில் அமைச்சர்
fuel
crisis
vasudeva nanayakkara
advise
By Sumithiran
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் கூப்பன் முறைமையை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் உயரடுக்கினரின் செல்வாக்கு காரணமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார(vasudeva nanayakkara) தெரிவித்துள்ளார்.
மேல்தட்டு வர்க்கத்தினருக்கு இவ்வாறான முறை பிடிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் போது இவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும் எனவும் கூறினார்.
நாங்கள் சொல்வதையெல்லாம் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுவதில்லை என அவர் தெரிவித்தார்.
