1400 பேரை பலியெடுத்த ஆப்கான் மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறு இரவு நிலநடுக்கம் ஏற்பட்ட அதே குனார் பகுதியை நேற்று(02) (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிக்கைபடி, நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதிகளில் நேற்றும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.
குனார் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறையின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் ஊடகங்களிடம் பேசுகையில், .இந்த புதிய நிலக்காடுகத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
