ரணில் தொடர்பில் மகிந்த தரப்பின் நிலைப்பாடு வெளியானது
சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடனோ கூட்டணி வைக்காது என்று அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
“எங்கள் கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் தனியான பயணத்தை மேற்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
ரணில் விக்ரமசிங்க என்ற நபரை ஆதரிக்கவில்லை
“ரணில் விக்ரமசிங்க என்ற நபரை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிரான சதித்திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.” என்றார்.
படையினரை ஒடுக்கும் அநுர அரசு
இதேவேளை தற்போதைய ஆட்சியாளர்கள் போர்வீரர்களுக்கு எதிராக வெறுப்பு சித்தாந்தத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகவும், அந்தக் சித்தாந்தத்தைக் கொண்டவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிப்பதாகவும்,சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை மூலோபாய ரீதியாக ஒடுக்குவதாக, வரகாகொட தம்மசித்தி, அஸ்கிரி மகா விஹாரை பீடத்தின் மகாநாயக்க தேரருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


