விஜயின் தேர்தல் பரப்புரையில் மீண்டும் உயிர்பலி!
த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்நாடு சேலத்தில் இன்று த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலேயே இவ்வாறு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
விஜய் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி என அடையாளம் காணப்பட்ட இந்திய மாநிலமான மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் (37) என்பவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
முதல்கட்ட விசாரணை
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரஜ் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வெயிலில் இருந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விஜய் பங்கேற்ற கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நெஞ்சை உருக்கும் சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜய் கூட்டத்தில் இப்போது ஒருவர் மயங்கி விழுந்து ஒருவர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |