புத்தாண்டுக்கு அரச பேருந்தில் பயணித்தவர்களுக்கு நற்செய்தி! காத்திருக்கும் பரிசுகள்
By Dilakshan
இந்தப் புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) அடைந்த மாபெரும் லாபத்தை பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9 முதல் 21 ஆம் திகதி வரை அரச பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு ஒரு சிறப்பு குலுக்கல் நடத்தி மதிப்புமிக்க பரிசுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணச்சீட்டுகள்
அந்தவகையில், பயணிகள் தங்கள் பயணத்தின் போது பெற்ற பேருந்து பயணச்சீட்டுகளைப் பத்திரமாக வைத்திருக்குமாறு போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தாண்டு காலத்தில் சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபை 6 நாட்களில் ரூ. 1 பில்லியன் வருவாய் ஈட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |