சிறையில் உள்ள பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம் : வைத்தியசாலையில் அனுமதி
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுகயீனம் காரணமாக நேற்று (15) பிற்பகல் பிள்ளையான் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மருத்துவ பரிசோதனை
இந்தநிலையில், அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் கடந்த வருடம் ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைகளுக்காக கடந்த 2ஆம் திகதி பிள்ளையான் சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்து வரப்பட்ட பின்னர் கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |