ஹோர்முஸ் நீரிணையை திறக்குமாறு ஈரானிடம் சீனா வலியுறுத்து
ஹோர்முஸ் நீரிணையின் இயல்பான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுமாறு, சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது ஈரானிய தரப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் இடம்பெற்ற உரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் இறையாண்மையும் பாதுகாப்பும் மதிக்கப்பட்டுப் பேணப்பட வேண்டும் என்றும் வாங் யி கேட்டுக்கொண்டுள்ளார்.
நீர்வழிப்பாதை வழி
அதேவேளையில், அந்த நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்தின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி நீரிணையை திறப்பதில் தமக்கு ஒருமித்த ஆர்வம் உள்ளது என்று அவர் அராக்சிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், போர் நிறுத்தத்தைத் தொடர்வதையும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதையும் சீனா ஆதரிக்கிறது என்று வாங் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |