தையிட்டி விகாரையை நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Sri Lankan Tamils Jaffna S Shritharan Selvarajah Kajendren NPP Government
By Theepan Apr 16, 2026 06:55 AM GMT
Report

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரையை நிலைநிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கப் போவதில்லை என்ற ஒருமித்த தீர்மானம்  எட்டப்பட்டுள்ளது. 

தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களை விடுவிப்பது தொடர்பாகவும், அரசாங்கத்தின் மறைமுகத் திட்டங்களை முறியடிப்பது குறித்தும் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று (15) யாழ். தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

தையிட்டி நில உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தினர். ​

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு கொலை : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு கொலை : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

அமைச்சர் வழங்கிய வாக்குறுதி

கடந்த சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரால் தையிட்டி பகுதியிலுள்ள காணிகள் அளவீடு செய்யப்பட்டு விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், விகாரை அமைந்துள்ள காணி தொடர்பில் நிலவும் மௌனம் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தையிட்டி விகாரையை நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Jaffna Thaiyiddi Vihara Cannot Be Allowed To Stand

ஒருபுறம் நில விடுவிப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் அதேவேளை, மறுபுறம் இந்தச் சட்டவிரோத விகாரையை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பலமான சட்ட மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை இங்கு உரையாற்றியவர்கள் வலியுறுத்தினர். ​

இறந்தவர்கள் விடுதலைப் புலிகளே - சந்திரகுமாருக்கு இங்கு இடமில்லை - சிறிதரன் எம்பி காட்டம்

இறந்தவர்கள் விடுதலைப் புலிகளே - சந்திரகுமாருக்கு இங்கு இடமில்லை - சிறிதரன் எம்பி காட்டம்

கலந்துரையாடலில் பங்குபற்றியோர்

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்வு நிலைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் வி. மணிவண்ணன் மற்றும் சட்டத்தரணி க.சுகாஸ் ஆகியோர் பங்கேற்று அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

தையிட்டி விகாரையை நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Jaffna Thaiyiddi Vihara Cannot Be Allowed To Stand

இவர்களுடன் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஆவண ரீதியான மற்றும் அறவழிப் போராட்ட வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

​கலந்துரையாடலின் முடிவில், அமைச்சரின் வாக்குறுதிகள் வெறும் காலங்கடத்தும் தந்திரமா அல்லது உண்மையான தீர்வா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பதோடு, விகாரையை நிலைநிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கப் போவதில்லை என ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்டது.

அத்துடன், நிலமிழந்த மக்களின் உரிமைகளுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சிவில் சமூகத்துடன் இணைந்து ஒருமித்த குரலில் போராடுவது என்றும் இக்கூட்டத்தில் உறுதியெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் பாடசாலையில் துப்பாக்கி சூடு : 09 மாணவர்கள் துடிதுடித்து பலி பலர் காயம்

வெளிநாடொன்றில் பாடசாலையில் துப்பாக்கி சூடு : 09 மாணவர்கள் துடிதுடித்து பலி பலர் காயம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021