அமெரிக்காவின் முக்கிய செய்தியை ஈரானுக்கு எடுத்து சென்றுள்ள பாக்கிஸ்தான்
பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததிலிருந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பரிமாறப்பட்ட செய்திகள் குறித்து விவாதிப்பதற்காக, ஈரான் அதிகாரிகளும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பரந்த ராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு மத்தியில், ஈரான் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுடன் செய்திகளைப் பரிமாறி வருகிறது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனிருடனான பேச்சுவார்த்தையிலிருந்து புதன்கிழமை விடைபெற்றார்.
இதில் இருதரப்பின் முக்கிய பேச்சுவார்த்தையாளரான முனீர், நேற்று தெஹ்ரானுக்குப் பயணம் செய்து , ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்திருந்தார்.
அமெரிக்க-ஈரான் உறவு
முனீர் தலைமையிலான பாகிஸ்தான் தூதுக்குழு, அமெரிக்காவின் ஒரு செய்தியைக் கொண்டு சென்றதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்தது.

சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், முனீரை ஈரானுக்கு வரவேற்பதில் தாம் “மிகுந்த மகிழ்ச்சி” அடைவதாக அராக்சி கூறினார்.
மேலும், “பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவதில்” ஈரானின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
இதன்படி அமெரிக்க-ஈரான் உறவை மீண்டும் தொடங்குவதற்கான இராஜதந்திர முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |