மண்ணெண்ணெய்க்கு வரிசையில் நின்ற மற்றுமொருவரின் உயிர் பிரிந்த துயரம்
                                    
                    Fuel Price In Sri Lanka
                
                                                
                    Sri Lanka Economic Crisis
                
                                                
                    Sri Lankan Peoples
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணெய்க்கு வரிசையில் நின்ற மற்றுமொருவரும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வடக்கு களுத்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற 63 வயதுடைய நபர் ஒருவதே இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
களுத்துறை தெற்கு, மஹா ஹீனடியங்கல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை 7 மணியளவில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றுள்ளார்.
 
இன்று மதியம் 1 மணியளவில் அவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்