கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு : வெளியான தகவல்
புதிய இணைப்பு
கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொஸ்கொட அதுருவெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
காலி - கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்றை தினம் (31.07.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
