மற்றுமொரு இலங்கையர் இந்தியாவில் கைது
Sri Lanka
India
By Sumithiran
இலங்கையருக்கு உதவியாக செயற்பட்ட மற்றுமொரு இலங்கையரை இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தொம்லூரைச் சேர்ந்த குமார் என்ற நபரே நேற்று (02) கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவின் பெங்களுரில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவரை ஓமானுக்குத் தப்பிச் செல்வதற்கு குறித்த நபர் உதவியதாக இந்திய காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அண்மையில் கைதான இலங்கையர்
இலங்கைக் குற்றக் கும்பலைச் சேர்ந்த மூவர் அண்மையில் இந்தியாவில் பதுங்கியிருந்தபோது அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு தங்குமிடம் கொடுத்த 3 பேரை அந்நாட்டு படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
