ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்ற இலங்கையர் உயிரிழப்பு
ஏற்கனவே இலங்கையரான பெண் ஒருவர் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இலங்கையரும் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினால் பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட இலங்கையரான சுஜித் யடவர பண்டார என்பவரே உயிரிழந்தவராவார்.
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில்
இவர் உயிரிழந்தமையை இஸ்ரேல் காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலிலேயே அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்புவதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒத்துப்போகும் DNA மாதிரிகள்
உயிரிழந்த நபர் சுஜித் யடவர பண்டார என்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில், அவரது பிள்ளைகளின் DNA மாதிரிகள் ஒத்துப் போவதாக இஸ்ரேல் காவல்துறையினர் உறுதிப்படுத்தினார்கள் என அவர் கூறினார்.

அவரது பூதவுடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 8 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்