இலங்கையை உலுக்கிய சம்பவம் - தந்தை, மகள், மகன் உயிரிழப்பு : மற்றுமொரு சந்தேகநபர் கைது
அம்பாந்தோட்டை - மித்தெனிய (Middeniya) முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரகெட்டிய காவல்துறை பிரிவின் தெலம்புயாய பகுதியில் நேற்று (22) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மூவர் சுட்டுக்கொலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெலம்புய, வேகந்தவல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அருண விதானகமகே என்பவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.
அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மித்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்