காதலியின் செயலால் காதலன் எடுத்த முடிவு
சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் தொடர்பில் இருந்த பெண்ணுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் மொனராகலையில் நேற்று(22.02.2025) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “உயிரிழந்த இளைஞன் மொனராகலை ஹுலந்தாவ தெற்கைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரது காதலி அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு உறவை முறித்துக் கொண்டுள்ளார். எனினும் இளைஞன் உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற போதிலும் அந்த இளம் பெண் அதற்கு உடன்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில், மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சியைப் பார்க்க இளைஞன் நேற்று(22) சென்றபோது, தன்னுடைய காதலி இன்னொரு இளைஞனுடன் நடனமாடுவதைக் கண்டு கலக்கமடைந்ததாகவும் வந்திருந்த தனது நண்பர்களுக்குத் தெரிவிக்காமல், மைதானத்தை விட்டு வெளியேறி, வீடு திரும்பி, தனது அறையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பான பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் இன்று (23) இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மொனராகலை காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்