ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் சக தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (23) முற்பகல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்குகொள்வது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாக, மேற்படி அனைத்து அமைப்புக்களும் இணைந்து ஓரே அணியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முகம் கொடுப்பது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்னும் கட்சியின் பெயரில் இணைந்து போட்டியிடுவது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சின்னத்தை பொதுவான சின்னமாக அனைவரும் ஏற்றுக்கொண்டு அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது.
மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்டத் தேர்வுக்குழுவை உருவாக்குவது ஆகியன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்