தொழிலதிபர் சாமியின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பு : டக்ளஸ் இரங்கல்
தொழிலதிபர் எஸ்.பி. சாமியின் மறைவு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாக அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
இன்று (23) இடம்பெறும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் கடந்த 18ஆம் திகதி காலமானார்.
அனுதாபம் தெரிவிப்பு
இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் அன்னாரின் மறைவிற்கு அனுதாபங்களைத் தெரிவித்து வந்தனர்.
அன்னாரது பூதவுடல் யாழ்ப்பாணம் (Jaffna) - நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இன்று இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்