உல்லாச கப்பலில் சென்றவர்களுக்கு நொடிப்பொழுதில் ஏற்பட்ட திகிலூட்டும் அனுபவம்
அன்டார்டிகா மற்றும் ஆர்ஜன்டினாவின் தெற்கு முனை இடையிலான கடல் பகுதியில் சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், 40 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகளால் பீதி அடைந்தனர்.
அன்டார்டிகாவிற்கும் தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு முனைக்கும் இடையிலான கடல் பகுதி, பயங்கர அலைகளுடன் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும்.
கப்பலைத் தாக்கிய 40 அடி உயர அலைகள்
இந்த கடலில் ஒரு சொகுசு பயணக் கப்பலில் பயணித்த பயணிகள், 40 அடி உயர அலைகள் கப்பலைத் தாக்கியபோது, மிகப்பெரிய திகிலூட்டும் அனுபவத்தைப் பெற்றனர்.
அவர்கள் எடுத்த காணொளியில், கப்பலின் பிரமாண்டமான ஜன்னல்கள் வழியாகத் தெரியும் உயரமான அலைகள் மற்றும் ஆச்சரிமடைய வைக்கும் கப்பல் அசைவு, ஆகியவற்றை பார்த்து பயணிகள் பீதியடைகின்றனர்.
பைத்தியக்காரத்தனமான அனுபவம்
இந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த லெஸ்லி ஆன் மர்பி கூறுகையில், 'இந்த பயங்கரமான தருணம், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் தெற்கு பெருங்கடல்களின் சங்கமத்தின் காரணமாக கடல் பயங்கர அலைகளுடன் கொந்தளிக்கிறது.
இது ஒரு 48 மணி நேர ரோலர் கோஸ்டர் அனுபவம். இந்த அனுபவம் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும், பாதுகாப்பான பயணமாகத்தான் இருந்தது. வாழ்நாளின் இந்த பயணத்திற்கு 1000 சதவீதம் மதிப்புக்குரியது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்