அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல் : வெடித்த சர்ச்சை
அமெரிக்காவிலுள்ள (United States) இந்து கோவில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாப்ஸ் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்து சமூகம்
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த முறை கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் மற்றொரு கோவில் அவமதிக்கப்பட்டுள்ளது.
இந்து சமூகம் வெறுப்புக்கு எதிராக உறுதியாக நிற்கிறது, வெறுப்பை வேரூன்ற விடாமல் தடுக்க சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம்.
அமைதியும் இரக்கமும் நிலவுவதை நமது மனிதநேயமும் நம்பிக்கையும் உறுதி செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து கோவில்கள்
கடந்த சில ஆண்டுகளில் பத்து இந்து கோவில்கள் தாக்கப்பட்டிருப்பதாக வட அமெரிக்க இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சினோ ஹில்ஸ் இந்து கோவில் மீதான தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
இதுபோன்ற இழிவான செயல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உள்ளூர் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், வழிபாட்டு தலங்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்