காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் அமெரிக்கா!
காசாவில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன், சவுதி அரேபியா மற்றும் எகிப்துக்கு இந்த வாரம் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தற்போது பிலிப்பைன்ஸில் உள்ள பிளிங்கன், சவுதி அரேபிய அதிகாரிகளை எதிர்வரும் புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து, எகிப்திய அதிகாரிகளுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவர் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
காசாவில் உள்ள அனைவரும் மனிதாபிமான தேவைகளுடன் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத்தின் போது போர் நிறுத்தம் மற்றும் காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் அதிகளவில் வழங்கப்படுவதை உறுதி செய்வது தொடர்பான பேச்சுக்களை அன்ரனி பிளிங்கன் முன்னெடுக்கவுள்ளார்.
அத்துடன், பலஸ்தீனிய இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |