நாட்டிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள்: கமல்ஹாசனின் திரைபடத்துடன் ஒப்பிட்ட அநுர
நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனின்(Kamal Haasan) பிரபலமான திரைப்படமான ‘தசாவதாரம்’ போன்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,“நமது நாட்டில் அரசியல் எப்போதும் பொதுமக்களுக்கு மேலானது. தலைவர்கள் மக்களுக்கு நெருக்கமாக இல்லை, மேலும் ஏராளமான பொதுப் பணத்தை வீணடித்தனர். இதைத் தடுத்த அரசாங்கம் நாங்கள்.
ஜனாதிபதி மாளிகைகள்
நாடு முழுவதும் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள் உற்பத்தி பயன்பாட்டிற்காக மதிப்பீடு செய்யப்படும்.
காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை ஒன்று கட்டப்பட்டுள்ளது. நமக்கு இங்கே ஜனாதிபதி மாளிகை ஒன்று தேவையா? மக்களுக்கு தேவையா? எனக்கு அந்த மாளிகை தேவையில்லை.
அந்த மாளிகையை சரியான முறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை முன்மொழிய ஆளுநரையும் மாவட்டச் செயலாளரையும் நான் அறிவுறுத்தியுள்ளேன்.
அத்துடன், நாடு முழுவதும் ஜனாதிபதி மாளிகைகள் உள்ளன. இவை கமல்ஹாசனின் திரைப்படமான தசாவதாரம் போன்றது. ஜனாதிபதியின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி மாளிகைகள் உள்ளன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |