மகிந்தவை வெளியேற்ற சட்டமூலம்: நிலைப்பாட்டை அறிவித்தது அரசாங்கம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லதிருந்து வெளியேற்றுவதற்கு நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை சமர்பிக்க அரசாங்கம் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Watagala) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பில் அரசியல் தரப்புகளில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மகிந்த ராஜபக்ச தங்கியிருக்கும் விஜேராம இல்லத்தின் 4.6 மில்லியன் வாடகையை செலுத்த வேண்டும் இல்லை என்றால் அதனை விட்டு வௌியேறுமாறு அறிவித்ததை அண்மையில் அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, மகிந்த ஆதரவு தரப்புகளில் இருந்து அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்ததுடன், இது தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் செயற்பாடு என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
சட்டமூலம்
அத்தோடு, விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் கடிதம் மூலம் அறிவித்தால், தாங்கள் வெளியேற தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறு கடிதம் மூலம் அறிவிக்க முடியாது என்றும் பதிலாக நாடாளுமன்றில் சட்டமூலம் ஒன்றை சமர்பிக்க இருப்பதாகவும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |