வரலாற்றில் முதல் தடவையாக ஐம்பது சதவீத வாக்குகளை பெறாத ஜனாதிபதி அனுர

SJB Anura Kumara Dissanayaka Election
By Theepan Mar 14, 2026 02:42 PM GMT
Report

அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், வரலாற்றிலேயே முதல் தடவையாக 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத ஒரு ஜனாதிபதி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்(13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த வடக்கு மக்கள்

ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தார்கள். வடக்கு கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும், அதுபோலவே தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஏனைய பல பிரதேசங்களிலும் 2024 இல் மாத்திரமல்ல, கடந்த 2019 ஆம் ஆண்டிலும் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்திருந்தார்கள்.

வரலாற்றில் முதல் தடவையாக ஐம்பது சதவீத வாக்குகளை பெறாத ஜனாதிபதி அனுர | Anura Did Not Receive Fifty Percent Of The Vote

ஆனால் கோட்டாபய ராஜபக்ச காலத்தில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் முடிவுகள் வேறுவிதமாக அமைந்தன. அதன் காரணமாக எம்மால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனது.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வரலாற்றிலேயே முதல் தடவை

அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், வரலாற்றிலேயே முதல் தடவையாக 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத ஒரு ஜனாதிபதியாகவே அவர் தெரிவு செய்யப்பட்டார். 43 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் அடைந்த வெற்றியானது ஒரு கௌரவமான வெற்றியாகக் கருத முடியாது.

வரலாற்றில் முதல் தடவையாக ஐம்பது சதவீத வாக்குகளை பெறாத ஜனாதிபதி அனுர | Anura Did Not Receive Fifty Percent Of The Vote

பொதுத் தேர்தலின் போது வடக்கில் ஆசனங்களை பெற முடியவில்லை. உண்மையில் வடக்கில் மாத்திரமல்ல, இலங்கை முழுவதிலும் நாம் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது கடந்த தேர்தலின் விளைவு மட்டுமல்ல, இலங்கைக்கு ஜனாதிபதித் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொட்டே நிலவி வரும் ஒரு அரசியல் போக்காகும்.

அடுத்தடுத்து இரண்டு தேர்தல் நடைபெறுவது பாரிய தாக்கம்

உதாரணமாக, 1982 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன வெற்றி பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் அவருக்குச் சார்பாகவே அமைந்தன.

வரலாற்றில் முதல் தடவையாக ஐம்பது சதவீத வாக்குகளை பெறாத ஜனாதிபதி அனுர | Anura Did Not Receive Fifty Percent Of The Vote

1988 டிசம்பர் 19 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 125 ஆசனங்களைப் பெற்றது.

1994 இல் பொதுத் தேர்தல் முதலில் நடைபெற்றது. சந்திரிகா குமாரதுங்க கஷ்டப்பட்டு ஒரு அரசாங்கத்தை அமைத்தார். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் இலட்சக்கணக்கான பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார்.

இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு தேர்தல்கள் நடைபெறும் போது, முதல் தேர்தலின் முடிவுகள் இரண்டாவது தேர்தலின் முடிவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பொதுத் தேர்தலில் இவ்வாறான ஒரு முடிவு எங்களுக்குக் கிடைத்தது."

அரச நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி : நியமிக்கப்படும் புதிய புலனாய்வு குகுழு

அரச நிறுவனங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி : நியமிக்கப்படும் புதிய புலனாய்வு குகுழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023