2.0 ட்ரம்ப்பின் மன்றோ வியூகத்தில் அநுர தப்ப முடியுமா? வெனிசூலா அடி இலங்கையிலும் அதிரும்!
இலங்கை மக்களுக்கு தமது தீவை மையப்படுத்தி வரக்கூடிய பூகோள தாக்கங்கள் குறித்து எந்தளவுக்கு பிரக்ஞை இருக்கிறதோ தெரியாது ஆனால் அவர்களின் நாட்டை தொலைதூரத்தில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் என்ற மனிதரின் 2.0 ஆட்சியின் புதிய மன்ரோ வியூகத்துக்குள் ஒரு வகையில் இழுக்கும்.
அமெரிக்காவின் ஐந்தாவது ஜனாதிபதியாக 1817 முதல் 1825 வரை பதவியில் இருந்த ஜேம்ஸ் மன்ரோ தனது பதவிக்காலத்தில் தென் அமெரிக்காவில் உள்ள ஸ்பானிய குடியேற்ற நாடுகளை அமெரிக்க செல்வாக்கின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையை எடுப்பதற்கு போட்ட சுழி அன்று முதல் கடந்தவார இறுதியில் வெனிசூலாவில் அதன் ஜனாதிபதி மதுரோவை அள்ளிச்சென்று நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று நிறுத்திய நகர்வு வரை நீளுகின்றது.
தென்னமரிக்க நாடுகள் மீதான அமெரிக்க வேட்கைக்குரிய மன்ரோவின் கோட்பாடு இலங்கைத்தீவு போன்ற ஆசிய நாடுகளையும் தீண்டக்கூடும்.
அன்றை ஜேம்ஸ் மன்ரோவின் காலத்தில், தென் அமெரிக்க ஸ்பானிய குடியேற்ற நாடுகள் ஸ்பெயினுக்கு எதிராக கிளர்ச்சிசெய்தது அன்றைய ஸ்பானிய முடியாட்சி, பிரான்சின் உதவியுடன் அதனை அடக்க முனைந்தபோது அமெரிக்கா ஸ்பானிய குடியேற்ற நாடுகளை தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவரத்தலைப்பட்ட வரலாறு இப்போது ட்ரம்ப்பின் ஆட்சியில் துளிர்விட்டுள்ளது.
இதனால் தான் அமெரிக்கான் புதிய தேசிய பாதுகாப்பு யுக்தியின் பாதையில் இனிமேல் அமெரிக்காவின் ஆதிக்கம் உலகில் எங்கு என்றாலும் உரசப்படுவதற்கு அது டென்மார்க்கின் ஆளுகையில் உள்ள கிறின்லாந்து என்றாலும் இடமில்லை என்பது ட்ரம்பின் செய்தியாகிறது.
அதாவது வெனிசூலாவில் கடந்த சனியன்று அமெரிக்கா எடுத்த இராணுவ நடவடிக்கையின் வெற்றி அமெரிக்க தலையீடுகளுக்குரிய புதிய எல்லைகளைத்திறந்து பூகோள அரசியல் கவலைகளை இன்னும் அதிகரிப்பதால் சீனாபோன்ற நாடுகளுடன் நெருங்கியுள்ள தம்மைபோன்ற நாடுகளுக்கும் இந்த நிலை சவாலானது என்பதும் தெரிந்துதான் மார்ச்சிய இடதுசாரிகள் என தம்மை வர்ணிக்கும் முகங்களை கொண்ட அநுர அரசாங்கம் அமெரிக்காவை கண்டிக்கும் விடயத்தில் மூச்சு விடாத நிலையில் ட்ரம்ப்பின் இந்த மன்றோ வியூகத்தில் இலங்கையும் வரக்கூடிய சாத்தியங்கள் உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |