புலம்பெயர் தமிழரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாரா அநுர.! மகிந்தவிற்கு விழும் பேரிடிகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தேர்தலில் தமக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தியோகபூர்வ இல்லம் பறிக்கப்படுவதும் தனது பாதுகாப்பு நீக்கப்படுவதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தலில் தங்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுதே என மகிந்த கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எச்சரிக்கை
இந்த நிலையில், எதிர்வரும் தேர்தல்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அரச தலைவர் ஒருவர், உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை இழந்ததற்கு பொதுமக்களின் எதிர்வினையை அரசாங்கம் எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறனதொரு பின்னணியில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இல்லத்திற்கு வாடகையாக ரூ. 4.6 மில்லியன் செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அநுர குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்
அதனை தொடர்ந்து, பல்வேறு மகிந்த ஆதரவு தரப்புகளில் இருந்து ஜனாதிபதி அநுரவின்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், மகிந்த ராஜபக்சவை பயங்கரவாதிகளுக்கு பலிகடாவாக்கும் முயற்சியில் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக மொட்டு கட்சியும் குற்றஞ்சாட்டியிருந்தது.
அத்தோடு, சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்த தாம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பதாகவும், நீக்கப்பட்ட தனது பாதுகாப்பை கோரி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |