அநுர அரசால் எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம்! மக்களின் நிலைப்பாடு
Fuel Price In Sri Lanka
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By Harrish
நாட்டில் எரிபொருள் விலையில் மேற்கொண்டுள்ள திருத்தம் அதிருப்தி அடைய செய்துள்ளதாக மக்கள் பலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் எரிபொருள் விலை திருத்தம் குறித்து வினவிய போதே மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தற்போது, டீசலின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களில் எந்த ஒரு பயனும் கிடைக்கப்பெற வில்லை என மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்