பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அநுர தரப்பு: கருணாகரன் விடுத்த சவால்!

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka National People's Power - NPP
By Harrish Dec 02, 2024 12:27 PM GMT
Report

அனைவரும் சமம் என கூறும் ஜே.வி.பியினருக்கு முடியுமாக இருந்தால், பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கும் கொடுத்துக்காட்டுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) சவால் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில்(Batticaloa) இன்றைய தினம்(02.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ புதிய அரசியலமைப்பை உருவாக்கி அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்து மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கான திட்டங்களை வகுப்பதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் போருக்கு அனுப்பப்பட்ட யாழ் இளைஞர்கள் விவகாரம்! மறுக்கும் ரஷ்யா

உக்ரைன் போருக்கு அனுப்பப்பட்ட யாழ் இளைஞர்கள் விவகாரம்! மறுக்கும் ரஷ்யா

13ஆவது திருத்தச் சட்டம்

அதுமட்டுமல்லாது, இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு கூறும் ரில்வின் சில்வா ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த 13ஆவது திருத்தச் சட்டமானது 1987ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட ஒரு விடயம்.

அவ்வாறிருக்கையில், அது இலங்கை மக்களின் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என எவ்வாறு கூற முடியும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து அதற்கு எதிராகப் போராடியவர்கள் ஜே.வி.பியினர் என்பது உண்மைதான். இதை மறந்து தற்போது எமது மக்கள் கனிசமாக ஜே.வி பியை ஆதரித்திருக்கின்றார்கள்.

எனினும், இந்த 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் எமது மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தேசிய அரசியலுக்குள் வந்திருப்பார்கள் என்பதையும் ரில்வின் சில்வா விளங்கிக்கொள்ள வேண்டும்.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் மக்களுக்கான தீர்வு

கடந்த 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு கொடுவரப்பட்டதில் இருந்து தற்போது வரை 22 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 13ஆவது திருத்தச் சட்டம் மாத்திரமே இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது.

அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக எதிர்த்து வந்த ஜே.வி.பியினரே 2006ஆண்டிலே இணைந்திருந்த வடக்கு - கிழக்கை பிரித்தும் வைத்தனர்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அநுர தரப்பு: கருணாகரன் விடுத்த சவால்! | Give Same Privilege Other Religns Challenge To Npp

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களின் போது கூட ஜே.வி.பியினால் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை.

ஜே.வி.பியை பொறுத்த மட்டில் ஜனாதிபதி, அமைச்சர்களின் கருத்தை விட கட்சியின் செயலாளரின் கருத்தே முதன்மையாக இருக்கும். எனவே அவரின் கருத்தை தட்டிக் கழித்துவிட முடியாது.

அநுர அரசிடம் கையளிக்கப்பட்ட சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம்

அநுர அரசிடம் கையளிக்கப்பட்ட சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம்

இனப்பிரச்சினை

13ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களுக்கு முழுமையான தீர்வு இல்லை என்பதே எங்கள் போன்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடகவும் இருக்கின்றது. ஆனால் தமிழர்களின் தீர்வு விடயத்தில் இது ஒரு முதற் புள்ளி என்பதே எங்களது கருத்து.

எனினும், இன்று 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என்று கூறும் ஜே.வி.பி யினர் இதுவரையில் தமிழர்களின் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு என்று எதனையும் சொல்லுவதாக இல்லை.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அநுர தரப்பு: கருணாகரன் விடுத்த சவால்! | Give Same Privilege Other Religns Challenge To Npp

இலங்கையில் அனைவரும் சமம், அனைவரும் சமத்துவமாக வாழ்வதற்கான ஒரு தீர்வினைக் கொண்டுவரப் போகின்றோம், 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள், அதனை இல்லாமல் ஆக்கப் போகின்றோம் என்று சொல்லுபவர்கள் தமிழர்களின் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினைத் தரப்போகின்றோம் என்பதையும் அவர்கள் கூற வேண்டும்.”என அவர் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள்

அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024