விரைவில் கோட்டாபய ராஜபக்ச கைது - அம்பலப்படுத்திய கம்மன்பில
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாக கொண்டு முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளர் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆகியோரை கைது செய்யும் திட்டம் தீட்டப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (3.2.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சூத்திரதாரி இருப்பதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதை அனைவரும் அறிவர்.
பாதுகாக்கும் முயற்சி
இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இந்த அரசாங்கத்தினுள் இருக்கின்றமையினால் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த அரசாங்கம் வேறு ஒருவரை சூத்திரதாரியாக சித்தரிக்க எத்தனிக்கிறது.
அது மாத்திரமல்லாது அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியையும் அரசாங்கம் மேற்கொள்கின்றது.
அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் புதிய விடயமொன்றை சித்தரிக்க முயல்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்
நாட்டின் புலனாய்வு அதிகாரியே உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலை மேற்கொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சித்தரிக்க எத்தனிக்கின்றனர்.
அப்போதைய புலனாய்வுத்துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அதன் காரணமாகவே புலனாய்வு அதிகாரியே தாக்குதலை நடத்தியதான கருத்தை சமூகத்தினுள் விதைக்க அரசாங்கம் எத்தனிக்கின்றது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |