மகிந்த , ரணில் அரசை விட அநுர அரசு தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) மற்றும் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) அரசாங்கங்களை விட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(anura kumara dissanayake) அரசாங்கத்தின் செலவு நூறு மில்லியன் ரூபாய்கள் அதிகம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க(champika ranawaka) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
சில அரசியல்வாதிகளின் போலியான சிக்கனம்
பெரிய வாகன அணிவகுப்புகள் இருக்காது என்றும், நாடாளுமன்றத்திலிருந்து உணவு எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் கூறினாலும், சில அரசியல்வாதிகளின் போலியான சிக்கனத்தைப் பராமரிக்க முன்பை விட அதிக செலவுகள் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அநுரவின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை
ஜனாதிபதி சமீபத்தில் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது, அவருடன் ஒரே ஒரு துணை வாகனம் மட்டுமே சென்றதாக ஊடகங்கள் காட்டியதாகவும், ஆனால் அவரது பாதுகாப்பிற்காக சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்