இனப்பிரச்சினையை மூடி மறைக்கும் அநுர அரசு : அனந்தி சசிதரன் பகிரங்கம்
தற்போது ஆட்சியில் இருக்கும் அநுர தலைமையிலான ஆட்சியாளர்கள் இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று நடக்கவே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு ஒரே நிலைமைதான். இது ஒரு இனம், இனவிடுதலைக்காக போராடிய இவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களும் நினைக்கப் போவதில்லை.
சர்வதேச தலையீட்டில் நியாயமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமே ஒழிய மற்றையபடி தீர்வு கிடையாது.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆட்சிக்கு வர முன்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் கடும் உருக்கமான பேச்சுக்களை நிகழ்த்தியிருந்தார்.
அநுர ஆட்சிக்கு வந்த பின்னர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவார் என்ற அடிப்படையில் காணாமல் போனவர்களின் உறவுகளின் மனங்களை கவரும் வகையில் அநுர இவ்வாறு உரையாற்றியிருந்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. பௌத்த தேரவாத சிந்தனைக்குள் அடக்கப்பட்டிருக்கின்ற தலைவர்கள் எங்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்களை விட தற்போதைய ஆட்சியாளர்கள் இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று நடக்கவே இல்லை. அனைவரும் இயற்கையாகவே மரணித்தனர், இலங்கையில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர், இங்கு வெறும் பொருளாதார பிரச்சினை மட்டும் தான் இருக்கின்றது என்ற மனநிலையில் இருக்கின்றனர்.
எதிர்க்கட்சியில் இருக்கும் கொந்தழித்தவர்கள் இன்று ஆட்சியைக் கைப்பற்றியதும் அந்த நிலைப்பாட்டில் இருந்து தவறியுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
