விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனாவில் உயிரிழப்பு
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள்ளார்.
முள்ளியவளை 1ம் வட்டாரத்தினை சேர்ந்த கந்தசாமி விசுவலிங்கம் என்பவரே நேற்று (15) மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 14.10.2025 அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் மிதிவண்டியில் பயணித்த குறித்த வயோதிபர் ஒருவர் பின்னால் வரும் வாகத்தினை பார்க்காமல் பாதசாரிகள் கடவை வெள்ளைக்கோட்டினால் மிதிவண்டியினை திருப்ப முற்பட்ட போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை ஓட்டிச்சென்ற வாகனத்தின் சாரதி முள்ளியவளை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு 17.10.2025 அன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
