யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஒருவர் கைது!
Sri Lanka Police
Jaffna
Law and Order
By Erimalai
யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (02.03.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விடுமுறை தினமான நேற்று, சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபான விற்பனை
விடுமுறை தினத்தில் மதுபானம் விற்க அனுமதி இல்லாதபோதும், மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் மிகவும் இரகசியமான முறையில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், மருதங்கேணி காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறைப் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான குழுவினர், குறித்த நபரை மதுபானப் போத்தல்களுடன் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி