11 போர்க்கப்பல்கள் மூழ்கடிப்பு! பஹ்ரைன் வான்தள தாக்குதல்! 4 ஆம் நாள் கந்தக ஆட்டம்
போர் என்றால் அங்கு முதலில் மரணிப்பது உண்மை என்ற ஒரு கருத்தியல் உண்டு. இதனால் ஈரானும் சரி அமெரிக்க இஸ்ரேலிய கூட்டணியும் வெளியிடும் போர் அறிக்கையிடல்களில் உண்மை மரணிக்கும் யதார்த்தத்துக்கு இடம் உண்டு.
இதுபோல போர் என்றால் அங்கு காயமடையாத படையினர் இருக்கமாட்டார்கள் (In war, there are no unwounded soldiers) என ஆர்ஜென்ரீன படைப்பாளி ஜோசே நரொஸ்கியின் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு கருத்தியலும் இலங்கை தீவில் தமிழர்கள் மீதான போர்க்களத்தில் போரிட்டவர்களுக்கு மட்டுமல்ல அந்த போரால் உடலால் உள்ளத்தால் காயமடைந்த சாமானிய தமிழருக்கும் பொருந்தும் அதேபோல மத்திய கிழக்கின் தற்போதைய நாசகார போருக்கும் பொருந்தும்.
உலகின் சமநிலையை அசைத்துவரும் இந்தப் போர் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்து இன்று நான்காவது நாளை கடக்கும் நிலையில் மத்தியகிழக்கின் பலநகரங்களில் இன்று அதிகாலை முதல் ஏட்டிக்குப்போட்டி தாக்குதல்கள் நடந்தன. நடக்கின்றன. இனியும் நடக்கும்.
ஏனெனில் ஈரான் மீது இனித்தான் தொமாஹாக் ஏவுகணைகள் போன்ற நாசகார ஆயுதங்களால் தாக்கப்போவதாக அமெரிக்க அரசதலைவர் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் அதனை ஆதாரப்படுத்துவது போல மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று ஓமான் வளைகுடாவில் இருந்த ஈரானிய கடற்படையின் 11 போர்க்கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிக்க கட்டளை பணியகம் அறிவித்த நிலையில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க வான் தளத்தை இன்று காலை தனது ஏவுகணைகளும் ட்ரோன்களும் அழித்தாக ஈரான் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தையும் குவைத்தையும் ஈரான் தாக்கியது பதிலுக்கு அமெரிக்க இஸ்ரேலிய கூட்டணி ஈரான் லெபனான் ஆகியவற்றை தாக்கியது.
ஈரானிய ஏவுகணை அச்சத்தால் எதிர்வரும் சனிக்கிழமை வரை பாடசாலைகள் மற்றும் பணியகங்கள்; மூடப்படுவதாகவும் பொது ஒன்று கூடல்களுக்கு தடைவிதிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் அறிவித்த நிலையில் ஓயாது வெடியோசைகள் ஒலிக்கும் வளைகுடா நிலவரங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்