கபட நாடகம் காட்டும் அநுர அரசு : திட்டமிட்டு பழிவாங்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியன்
மேன்முறையீட்டு நீதிபதிகளின் பதவி உயர்வு குறித்து நீதிபதி இளஞ்செழியனுக்கு (Manickavasagam Ilancheliyan) அநுர அரசு திட்டமிட்டு அநீதி இழைக்கப்பட்டமை தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிபதி பதவி உயர்வுக்கான அனைத்து தகுதிகளும் நீதிபதி இளஞ்செழியனுக்கு காணப்பட்டாலும் அந்த பதவி உயர்வு தடுக்கப்ட்டது.
நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற ஒருவர்.
குறிப்பாக கோட்டாபய (Gotabaya Rajapaksa) காலத்தில் நீதி மறுக்கப்பட்டு மற்றும் பழிவாங்கப்பட்ட பலருக்கு அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தினால் நீதி கிடைக்கப்பெற்றது.
இதன் உச்சமாக தற்போது அநுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது.
உரிமை வழங்கப்பட வேண்டிய இளஞ்செழியன் தற்போது உரிமை இல்லாது நீதித்துறையில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இதேவேளை, அமெரிக்க (America) அரசாங்கத்தினால் கௌரவ பிரஜாவுரிமை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு அமெரிக்காவில் தரித்து இருப்பதற்கான ஒரு பரிந்துரையும் செய்யப்பட்டது.
ஆனால், அவர் அந்த பரிந்துரையை நிராகரித்தது விட்டு என் மக்களுக்கு பணியாற்ற தொடர்ந்து நீதித்துறையோடு பயணிப்பேன் என தெரிவித்த ஒரு மனிதன் தான் நீதிபதி இளஞ்செழியன்.
இந்தநிலையில், இவ்வாறு இளஞ்செழியன் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டமைக்கான பிண்ணனி குறித்தும் அரசின் இந்நகர்வின் ஆதாயம் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 30 நிமிடங்கள் முன்
