சிறைச்சாலை மோதல் குறித்து அநுர வெளியிட்ட சிறப்பு அறிக்கை
நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்மொழியப்பட்ட இந்த செயல்முறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 சிறைச்சாலைகள்
இந்த செயல்முறையானது அனைத்து 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கி, சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை காவல்துறை, சிறப்பு பணிப்படை (STF) மற்றும் தேவைப்படுமிடங்களில் ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |