இலங்கையின் அடுத்த ஆட்சி ஜே.வி.பிக்கே..! ரோ உளவுப் பிரிவின் அதிரடி அறிக்கை
அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு வெறுமனே செல்லவில்லை, உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றார் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று( 08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் புலிகளின் வீரம் செறிந்த குடாரப்பு தரையிறக்கம் பற்றிய நாவல்
இந்திய அரசாங்கம் அழைப்பு
“எங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார இந்தியாவுக்கு வெறுமனே செல்லவில்லை. இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்த காரணத்தினாலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.
இலங்கையின் அடுத்த அதிபர் அனுரகுமார என்று இந்திய ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதன் காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அடுத்த அரசாங்கம் எமது தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி தலைமையிலான அரசாங்கமாகத்தான் இருக்கும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |