அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அமெரிக்காவிற்கு (America) உத்தயோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், நேற்று (22) இரவு அவர் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கலந்துரையாடல்கள்
இதனடிப்படையில், நாளை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்றவுள்ளார்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலைவாய்ப்பு
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அநுரகுமார திஸாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |