பிரேசில் ஜனாதிபதி லூலாவின் வெற்றிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!
பிரேசிலின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியை ஜனநாயகத்தின் வெற்றியாகவும், ஊழல், பிளவு மற்றும் அரசியல் ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் வழங்கிய நிராகரிப்பாகவும் அநுரகுமார வர்ணித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், லூலாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது, அரசியல் வம்சங்களாலோ அல்லது நீதியை விட வலிமையே மேலானது என்று நம்புபவர்களாலோ மக்களைத் தவறாக வழிநடத்த முடியாது என்பதை நிரூபித்துள்ளது.
வெளியிட்ட பதிவு
இன்று, பிரேசில் மக்கள் ஒரு தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், ஊழல், பிளவு மற்றும் அரசியல் பொய்களின் சக்திகளையும் தோற்கடித்துள்ளனர்.
Today, the people of Brazil did not just win an election; they defeated the forces of corruption, division and political lies. Comrade @LulaOficial’s historic victory in Brazil shows that the people cannot be fooled by bankrupt political dynasties and the ghosts of the past who believe might is greater than right. Many congratulations, companheiro, for leading the march of progress yet again!
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) October 26, 2026
லூலாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது, தோல்வியடைந்த அரசியல் பரம்பரைகளும், சட்டத்தை விட அதிகாரமே உயர்ந்தது என்று கருதும் கடந்த கால சக்திகளும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
மீண்டும் ஒருமுறை முன்னேற்றப் பாதையில் தலைமை தாங்கிச் செல்லும் உங்களுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |