பொய் அறிக்கை: செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது...! அரசுக்கு தமிழ்த்தரப்பு அழுத்தம்

Sri Lankan Tamils Government Of Sri Lanka chemmani mass graves jaffna
By Independent Writer Oct 26, 2026 04:05 AM GMT
Report

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் ராஜ் சோமதேவவின் ஊகங்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், பல்துறை ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சம உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

ஊடகமொன்றுக்கு நேற்று (25) கருத்துத் தெரிவிக்கும் போதே அவ் இயக்கத்தின் செயற்பாட்டாளர் வீரசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும் இதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணியில் மீட்கப்பட்ட நீலப்பையும் ராஜ் சோமதேவாவின் நீண்ட கறுப்பு அறிக்கையும் : சண் மாஸ்டர் கண்டனம்

செம்மணியில் மீட்கப்பட்ட நீலப்பையும் ராஜ் சோமதேவாவின் நீண்ட கறுப்பு அறிக்கையும் : சண் மாஸ்டர் கண்டனம்

சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியம்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் 17 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் காணப்படுகின்ற போதிலும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதற்கான நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை.

கடந்தகால அரசாங்கங்கள் முன்னெடுத்த கண்துடைப்பு நடவடிக்கைகளை விடவும் தற்போதைய அரசாங்கம் அவற்றை மிகவும் கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றது.

பொய் அறிக்கை: செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது...! அரசுக்கு தமிழ்த்தரப்பு அழுத்தம் | Raj Somadeva S Report Of Chemmani Mass Grave

யுத்த காலப்பகுதியில் அரசாங்கமும் அரச படைகளும் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகின்றது.

அவை தொடர்பான சாட்சியங்களைத் திசைதிருப்பி அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கைகளில் கடந்தகால அரசாங்கங்களைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றது.

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் சாட்சியமளித்த கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் சாட்சியத்தின் அடிப்படையில், அக்காலப்பகுதியில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் செம்மணியில் புதைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் பச்சிளம் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோரின் 580க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழித் தொகுதியாகச் செம்மணி அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான நிதி மற்றும் ஆளணியினை அரசாங்கம் வழங்கியிருந்தது.

எனினும், எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருந்த விதம் மற்றும் அவற்றுடன் கண்டெடுக்கப்பட்ட பாவனைப் பொருட்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கையை புதைத்தொழிக்க முயலும் சோமதேவவின் அறிக்கை!

தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கையை புதைத்தொழிக்க முயலும் சோமதேவவின் அறிக்கை!

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை 

ஒரு தரப்பினர் இவை சாதாரண புதைகுழிகள் எனக் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றமைக்கான சாட்சியங்கள் இவை எனக் கருதுகின்றனர். அகழ்வுப் பணிகள் தொடர்பில் பல்வேறு சிவில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

எலும்புக்கூடுகளின் காலத்தைத் தீர்மானித்தல், மரபணுப் பரிசோதனைகள், எலும்புகளிலிருந்து மரபணு மாதிரிகளைப் பிரித்தெடுத்தல், சவக்கிடங்கு ஆய்வுகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் விரிவான பிரேதப் பரிசோதனைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பக்கச்சார்பற்ற தன்மையும் நிபுணத்துவமும் உறுதிப்படுத்தப்படுவதுடன், தொல்லியல் ஆய்வுகளை மட்டும் நம்பியிருக்காமல் பல்துறை ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொய் அறிக்கை: செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது...! அரசுக்கு தமிழ்த்தரப்பு அழுத்தம் | Raj Somadeva S Report Of Chemmani Mass Grave

அகழ்வுப் பணிகளுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் ராஜ் சோமதேவ, களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் முதுகலைப் பட்டப் படிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த தொல்லியல் ஆய்வாளராவார்.

அவர் செம்மணி விவகாரம் தொடர்பில் மூன்று அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அவரது இறுதி அறிக்கை பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

சம உரிமை இயக்கம் என்ற வகையில், யுத்தத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் காலதாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்.

குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும்.

செம்மணி விவகாரத்தின் ஊடாக சமூகத்தில் பிளவுகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் ஊகங்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைச் சர்வதேச தரத்திலான, பக்கச்சார்பற்ற நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர் குழுவின் ஊடாக ஆய்வு செய்து, செம்மணியில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றோம்“ என தெரிவித்தார்.

செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது....

செம்மணிக்காக இப்போது பேசாவிட்டால் இனி எப்போதும் பேச முடியாது....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026