மந்தகதியில் அநுரவின் ஊழல் வேட்டை...! உயர்மட்டக் கைதுகளைத் தடுக்கும் மர்ம முடிச்சுகள்
கடந்த கால ஊழல்வாதிகள் மற்றும் பெரும் புள்ளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்ற அதீத எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு மக்கள் வாக்களித்த நிலையில், தற்போதைய மந்தகதியிலான நடவடிக்கைகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
பழைய அரசியல் சக்திகளின் பலமான கட்டமைப்பு மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக, அறிவிக்கப்பட்ட பல உயர்மட்டக் கைதுகள் இன்னும் சாத்தியமாகவில்லை என்பது அரசாங்கத்திற்கு ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளது.
முறையான சாட்சியங்களைச் சேகரிப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் நீதித்துறை நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி அரசாங்கம் காலத்தைக் கடத்தி வருவது, இது ஒரு அரசியல் நாடகமோ என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகளிடையே வலுப்படுத்தியுள்ளது.
முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்வதைத் தவிர்த்து, இரண்டாம் நிலை அதிகாரிகளை மட்டும் இலக்கு வைப்பதன் மூலம் அரசாங்கம் தனது அரசியல் பிம்பத்தைத் தக்கவைக்க முயல்வதாக விமர்சனங்கள் எழுகின்றன.
கைதுகள் தொடரும் என்ற எச்சரிக்கை ஒரு அரசியல் ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா அல்லது உண்மையில் நீதியை நிலைநாட்டும் நோக்கம் உள்ளதா என்பது குறித்தும், தற்போதைய அரசியல் களம் குறித்தும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய The Opinion நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |