பகிரங்க விவாதத்தை தவிர்க்கும் சஜித்: குற்றம் சாட்டும் அனுர!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கிடையிலான பகிரங்க விவாதத்துக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு திகதியை தெரிவு செய்யுமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளினதும் தலைவர்களுக்கிடையிலான பகிரங்க விவாதம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையிலேயே, அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa), அனுரகுமார திஸாநாயக்கவுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தேசிய மக்கள் சக்தி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது.
பகிரங்க விவாதம்
இந்த விவாதத்துக்கு தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது.
எனினும், இந்த விவாதம் முன்னெடுக்கப்படும் திகதி தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு திகதியை தெரிவு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு, அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தாமதப்படுத்தப்படும் விவாதம்
அத்துடன், விவாதத்துக்கு தயார் என கூறிய தரப்பினர் தற்போது அஞ்சுவதாகவும் விவாதத்தை தாமதப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு கட்சிகளுக்கிடையிலான பகிரங்க விவாதத்தை முன்னெடுக்க தமது கட்சி நான்கு நாட்களை தெரிவு செய்திருந்த போதும், அந்த நான்கு நாட்களிலும் தனக்கு வேறு வேலை இருப்பதாக சஜித் பிரேமதாச கூறியதாக அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்க விவாதத்துக்கு ஒரு திகதியை தெரிவு செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்கான இரண்டு கட்சிகளினதும் நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த விவாதம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |