மாறப்போகும் இலங்கை அரசியலின் தலையெழுத்து
Anura Kumara Dissanayaka
Sajith Premadasa
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
தற்போதைய சபாநாயகர் அரச தலைவராவதில் சிக்கல்
அநுர, சஜித்திற்கு அரசாங்கத்தை அமைக்கும் தெரிவு
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிறேமதாச ஆகியோர் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் ஒரு தெரிவு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளரும் ஊடகவிலாளருமான அமிர்தநாயகம் நிக்சன் கூறுகிறார்.
ஐ.பி.சி தமிழுக்கு விசேட செவ்வியில் அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் எதிர்ப்பு அலை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக அரச தலைவர் - பிரதமரை பதவி விலகக் கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நெருக்கடி நிலையில், அரச தலைவர் பதவி விலகினால், தற்போதைய சபாநாயகர் தற்காலிக அரச தலைவராக பதவி வகிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அமிர்தநாயகம் நிக்சன் தனது எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளார்.
