காலாவதியாகும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை : வெளிநாடொன்றின் தலைவரிடம் உதவி கோரிய அனுர
இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் ஜனாதிபதி அனுர உதவி கோரியுள்ளார்.
புதுடெல்லியில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, இந்த வர்த்தக சலுகையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, உதவும்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சு
புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

ஜனாதிபதி அனுரவின் கோரிக்கையை அடுத்து, ஜிஎஸ்பி பிளஸ் வசதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இலங்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் உறுதியளித்துள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி உறுதி
மேலும் இலங்கையுடனான பல்வேறு வர்த்தக உடன்பாடுகள் மூலம் கூடுதல் சலுகைகளை வழங்குவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை காலாவதியாகவுள்ள நிலையில்,இலங்கை அரசாங்கம் மீண்டும் அதற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |