பெரிய நாற்காலியின் மூலையில் அமர்ந்திருக்கும் சிறிய மனிதர் அநுர : விமர்ச்சிக்கும் சஜித் எம்.பி
தற்போதைய அரசாங்கம் சிறிய மக்களின் அரசாங்கம் என்றும், பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் சிறியவர்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
1970 இல் சிறிமா அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தினாலும், 77 ஜே.ஆர். அரசாங்கம் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினாலும், 1994 இல் சந்திரிகா அரசாங்கம் பல்கலைக்கழக அமைப்பை விரிவுபடுத்தினாலும், 2004 இல் மகிந்த அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், தற்போதைய அரசாங்கம் இதுவரை அப்படி எதையும் செய்யவில்லை என்று பிரசாத் சிறிவர்தன கூறுகிறார்.
பெரிய நாற்காலியின் மூலையில் அமர்ந்திருக்கும் சிறிய மனிதர்
இவ்வளவு பெரிய விஷயங்களைச் செய்ய பெரிய கனவு காணும் பெரிய மனிதர்கள் இருக்க வேண்டும் என்றும், அனுர திசாநாயக்க மக்களால் வழங்கப்பட்ட பெரிய நாற்காலியின் மூலையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய மனிதர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு இணைய ஊடகமொன்றுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |