ஞானசார தேரருக்கு ஆதரவான போராட்டம்: நீதியமைச்சரிடம் விளக்கம் கோரும் அநுர
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் விடுதலைக்காக விகாதரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் முடிந்த பின்னரும் அது தொடர்பான சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதாவது தேரர்களின் சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்த போது தற்போதைய நிலைமை குறித்து நீதியமைச்சரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கம் கோரியுள்ளார்.
இதன்போது சமகால அரசாங்கத்துடன் முறுகல் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டு சத்தியாக்கிரகம் முன்னெடுப்பதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேரர்களின் அறிவுரை
மேலும் தெரிவித்த ஜனாதிபதி, நாங்கள் பதற்றமடையாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது, மகாநாயக்க தேரர்களின் அறிவுரைக்கு அமைவாக காரியங்களைச் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்கு ஹர்சன பதிலளிக்கையில், இப்போது எந்தப் பிரச்சினையும் வராது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு சர்ச்சைக்குரிய தேரர் சென்றதன் மூலம் பிக்குகளின் போராட்டத்தின் உண்மைத் தன்மை அம்பலமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |