அனுராதபுரம் வைத்தியர் வன் கொடுமை விவகாரம் : அதிரடியாக கைது செய்யப்பட்ட இருவர்
அனுராதபுரம் (Anuradhapura) போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் (Sri Lanka Police) தெரிவித்துள்ளனர்.
கல்னேவ, நிதிகும்பாயாய பகுதியில் வைத்து நேற்று (12.03.2025) இரவு மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை கைது
வைத்தியரை தகாத முறைக்கு உட்படுத்தியதன் பின்னர் சந்தேக நபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதுடைய சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண் வைத்தியரை தகாத முறைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13.03.2025) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
மேலதிக விசாரணை
கல்னேவ காவல்துறையினர் மற்றும் அனுராதபுரம் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (12.03.2025) மேற்கொண்ட தேடுதலின் போது, கல்னேவ பிரதேசத்தில் உள்ள காட்டில் மறைந்திருந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், தற்போது அவர் அனுராதபுரம் காவல்நிலையத்தின் காவலில் உள்ளார்.
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட வைத்தியரை மிரட்ட பயன்படுத்தப்பட்ட கத்தியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்